மறைக்கல்வி சுருக்கம்

1. கிறிஸ்தவர்களுக்கு கடவுள் யார்?

மூவொரு கடவுள் (தந்தை மகன் தூயஆவியார்)

தந்தை ஊற்று -படைப்பவர்

மகன் - இயேசு கிறிஸ்து தந்தையினின்று பிறந்தவர்

தூய ஆவியார் - தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறவர் துணையாளர்.

2. கடவுள் தான் முதலாவதாக செயல்படுகிறார் - கடவுள் மனிதனை படைத்தார் எதற்காக படைத்தார்?

இறைவனை அறியவும்

இறைவனை அன்பு செய்யவும் இறைவனுக்கு பணிவிடை செய்யவும் -இறைவனோடு என்றென்றைக்கும் இருக்கவும்.

3. மனிதன் இதை செய்யாமல் இருக்கும்போது அவனுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற உறவு விரிசல் (முறிவு) அடைகிறது.


4. பாவம் - பொருள்:                                    அமர்தேஐயா - குறி தப்புதல்     

சொற்பொருள் விளக்கம்:  கட்டளைகளை மீறுவது பாவம் நல்லது என்று தெரிந்தும் செய்யாமல் இருப்பது பாவம்.

பாவத்தின் இரு வகைகள்:

1. பிறப்பு நிலை பாவம் 

2. செயல் வழி பாவம்.

செயல் வழி பாவத்தில் இருவகை:  

1. சாவான பாவம் 

2. அற்ப பாவம்.

சாவான பாவம்:                                 (முழு அறிவு + முழு விருப்பம் + பெரியதொரு தீங்கு)

தலையான 7 பாவங்கள்: 

1. தற்பெருமை 

2. சீற்றம் 

3. காம வெறி

4. பேராசை 

5. பெருந்தீனி விரும்பல்

6. பொறாமை 

7. சோம்பல்

தூய ஆவியாருக்கு எதிரான 6 பாவங்கள்:

1. ஊகத் துணிவு

2. விரக்தி + நம்பிக்கையின்மை 

3. அறியப்பட்ட உண்மையை எதிர்ப்பது 

4. மற்றவர்களின் ஆன்மீக நன்மைகளின் மீது பொறாமைப்படுவது 

5. பாவத்தில் மூழ்கி நிலைத்திருப்பது 

6. இறுதி மனம்திரும்பாமை

விண்ணகத்திற்கு கூக்குரலிடும் நான்கு பாவங்கள்:

1. கொலை 

2. ஓரினச் சேர்க்கை

3. ஏழைகளை ஒடுக்குதல்

4. சேரவேண்டிய கூலியைக் கொடுக்காமல் இருத்தல்.

பிறருடைய பாவத்தில் பங்காளியாக 9 விதங்கள்: 

1. ஆலோசனை கொடுத்தால்  

2. கட்டளையிடல் 

3. ஒப்புதல் அளிப்பது 

4. தூண்டுதல்

5. முகஸ்துதி பாடுதல் 

6. உண்மையை மறைத்தல்  

7. ஒத்துழைத்தல் 

8. அமைதியாக இருத்தல்

9. தீமையின் சார்பாக வாதாடுவது

10 கட்டளை:

1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை. 

2.கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே. 

3.கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி. 

4.தாய். தந்தையை மதித்துப் பேணு. 

5.கொலை செய்யாதே. 

6.மோக பாவம் செய்யாதே. 

7.களவு செய்யாதே. 

8.பொய் சாட்சி சொல்லாதே. 

9.பிறர் தாரத்தை விரும்பாதே. 

10.பிறர் உடைமையை விரும்பாதே.

திருஅவையின் 6 ஒழுங்குமுறைகள்: 

1) ஞாயிற்றுக் கிழமைகளிலும்,கடன் திருநாட்களிலும் திருப்பலி ஒப்புக் கொடு. 

2) ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுக. 

3) பாஸ்காக் காலத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு கொண்டு. நற்கருணை உட்கொள். 

4) குறிப்பிட்ட நாட்களில் புலால் தவிர்த்து, நோன்பு போன்ற தவ முயற்சிகளை மேற்கொள். 

5) குறைந்த வயதிலும், நெருங்கிய உறவிலும் திருமணம் செய்யாதே. 

6) உன் ஞான மேய்ப்பர்களுக்கு உன்னாலான உதவி செய்.

பாவத்தை கையாளும் 3 வழிகள் 

1. நின்று போராடுதல்  2. ஓடி மறைந்துவிடுதல் 

3. புண்ணிய வழி (நடு வழி)

ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது? 

1) செய்த பாவங்களை நினைவுக்குக் கொண்டுவருதல். 

2) அவற்றிற்காக மனம் வருந்துதல். 

3) இனிமேல் பாவம் செய்வதில்லை எனத் தீர்மானித்தல். 

4) குருவிடம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுதல். 

5) பாவப் பரிகாரமாகவும், பாவ மன்னிப்பிற்கு நன்றியாகவும் குரு கொடுத்த கட்டளையை நிறைவேற்றுதல்.

5. பாவத்தின் காரணமாக கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான முறிவை, கடவுள் எவ்வாறு குணப்படுத்துகிறார் - இயேசு - அருளடையாளங்கள் - 7: 

1. திருமுழுக்கு 

2. உறுதிப்பூசுதல்

3. நற்கருணை

4. ஒப்புரவு

5. நோயில் பூசுதல்

6. குருத்துவம் 

7. திருமணம் - ஜெபங்கள்

உடல் சார்ந்த 7 இரக்கச் செயல்கள் 

1) பசியால் இருபவர்களுக்கு உணவு கொடுத்தல் 

2) தாகமாய் இருபவர்களுக்குக் குடிக்க கொடுத்தல்.

3) ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுத்தல்.

4) அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்தல்.

5) சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்லுதல்.

6) நோயாளரைச் சந்தித்தல். 

7) இறந்தவர்களை அடக்கம் செய்தல்.

ஆவி சார்ந்த இரக்கச் செயல்கள் புரிவோம் :

1) ஐயப்படுவோர்க்கு அறிவுரை கூறுதல். 

2) அறியாமையில் இருப்போருக்குக் கற்பித்தல். 

3) பாவிகளை நன்னேறிப்படுதுதல். 

4) துயருறுவோருக்கு ஆறுதல் கூறுதல். மன்னித்தல். 

5) குற்றங்களை மன்றாடுதல்.

6) தீங்கு செய்வோரைப் பொறுத்துக்கொள்ளுதல்.

7) வாழ்வோருக்காகவும் இறந்ததோருக்காகவும்  மன்றாடுதல்.

மூன்று நிலையான நற்காரியங்களை செய்வோம்:

1) இறைவேண்டல்

2) நோன்பு

3) ஈகை

தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகளால் நிறைந்திருப்போம்:

1) தாழ்ச்சி 

2) பொறுமை 

3) கற்பு

4) தாராள குணம் 

5) அளவோடு உண்ணல் 

6) பிறரன்பு 

7) சுறுசுறுப்பு

6. இறைவனோடு நமது உறவு சீராகும்போது அதன் விளைவுகள் :

திருஅவையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம்

நாம் நம்பிக்கையுடையவர்களாய் இருப்போம்

நீசே - கான்ஸ்டான்டிநோபிள் நம்பிக்கை அறிக்கை -

ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும். நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.

அருள்வாழ்வு சார்ந்த 3 நற்பண்புகள்:

1) நம்பிக்கை

2) எதிர்நோக்கு

3) அன்பு

தலையான 4  நற்பண்புகள்:

1) விவேகம்

2) நீதி 

3) வலிமை 

4) நிதானம்

திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

தூய ஆவியாரின் கொடைகளால் நிறைந்திருப்போம்:

1) ஞானம்

2) மெய்யுணர்வு 

3) அறிவுரைத் திறன் 

4) நுண்மதி 

5) ஆற்றல் 

6) இறைப்பற்று

7) இறை அச்சம்

தூய ஆவியாரின் வரங்களால் நிறைந்திருப்போம்.

தூய ஆவியாரின் கனியால் நிறைந்திருப்போம்:

1) அன்பு

2) மகிழ்ச்சி

3) அமைதி 

4) பொறுமை 

5) பரிவு 

6) நன்னயம் 

7) நம்பிக்கை 

8) கனிவு

9) தன்னடக்கம்

10) பணிவு நயம்

11) தாராள குணம்

12) நிறை கற்பு

7. மனிதரின் நிறைவு நிலை இறப்பு:

1) தீர்ப்பு 

2) விண்ணகம் (உத்தரிக்க நிலை)

3) பாதாளம்